செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தார் ஸ்டாலின்

சென்னை, ஜூன் 12– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக நீரினை திறந்து வைத்தார். இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 114.910 அடியாகவும் நீர் இருப்பு 85.583 டி.எம்.சி. ஆக உள்ளது. காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15–ம் தேதி வரை 5,22,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 138.52 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு உச்சநீதிமன்ற […]

Loading

செய்திகள்

இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்காக குளுகுளு வசதியுடன் ஓய்வுக் கூடம்

அண்ணாநகரில் உதயநிதி திறந்தார் சென்னை, ஜூன் 12– துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், ரிப்பன் கட்டட வளாகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார். ரூ.975.63 கோடி மதிப்பீட்டில் 108 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர் 3வது நிழற்சாலையில் இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினை திறந்து வைத்தார். இந்த ஓய்வு கூடத்தில் இருக்கை வசதிகள், கழிவறை, ஸ்மார்ட் ஃபோன் […]

Loading

செய்திகள்

கட்டணமின்றி பஸ்களில் பயணம் செய்யும் மகளிர் குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. சர்ச்சைப் பேச்சு

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம் சென்னை, ஜூன் 12– கட்டணமின்றி பஸ்களில் பயணம் செய்யும் மகளிர் குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. சர்ச்சைக்குறிய வகையில் பேசியதற்கு பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேனி ஆண்டிப்பட்டியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ மகாராஜன் ஆண்டிப்பட்டியின் மண்ணூத்து கிராமத்தில் சமூகநல கூடத்தை திறந்து வைத்து பேசுகையில், ‘இங்க இருக்குற மர மட்டையெல்லாம் வாடிப் போய் இருந்துச்சுல்ல. இந்த மகராசன் எம்.எல்.ஏ வாக வந்த பிறகுதான் […]

Loading

செய்திகள்

2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

திருநெல்வேலி, ஜூன் 11– 2026வது ஆண்டு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். தமிழகத்தில் பா.ஜ.க, கூட்டணிக் கட்சியின் ஆட்சி தான் நடைபெறும் என தமிழக பா.ஜ.க., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழத்தில் கடந்த 11 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. சில பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது. நிறைய […]

Loading

செய்திகள்

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் விருதுநகர், ஜூன் 11– விருதுநகர் அருகே வடகரையில், தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், காரியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு […]

Loading

செய்திகள்

கூட்டணி இல்லாமல் தி.மு.க. வெற்றி பெற முடியாது

சென்னை, ஜூன் 10– 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் தி.மு.க. வெற்றி பெற முடியாது என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானங்கள் மற்றும் 2026 தேர்தல் குறித்து மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். தற்போது நீடித்து வரும் ஒற்றுமையை, மேலும் கட்டிக் காப்பாற்ற […]

Loading

செய்திகள்

தமிழகம் இந்தியாவுக்கு ‘லீடர்’: ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜூன் 10– முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை, தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவிற்கே தமிழகம் ‘லீடர்’ என்ற இடத்தை அடைந்திருக்கிறது. தமிழ்நாடு ‘மாடல் மாநிலம்’ என்று பெருமிதத்துடன் கூறினார். கடந்த 2001-ம் ஆண்டு 70 அலுவலர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் நிறுவப்பட்ட சென்னை உலகளாவிய வணிக மையம் விரிவாக்கப்பட்ட போது செப்டம்பர் 2006-ல் தரமணியில் கருணாநிதியால் […]

Loading

செய்திகள்

திருந்தாத தி.மு.க. ஆட்சி: எடப்பாடி கடும் கண்டனம்

சென்னை, ஜூன் 9– தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. தி.மு.க. அரசு இன்னமும் திருந்தவில்லையே என எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாளின் குடும்பத்தாருக்கு அண்ணா தி.மு.க. சார்பில் எனது […]

Loading

செய்திகள்

தமிழக வளர்ச்சிக்கு ஸ்டாலினிடம் திட்டக்குழு அளித்த அறிக்கைகள்

சென்னை, ஜூன் 9– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 1) தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள் 2) நீடித்த வளர்ச்சி இலக்குகள்– 2030 -தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் 3) தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம் 4) அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை ஆகிய நான்கு […]

Loading

செய்திகள்

‘தூய்மை மிஷன்’ இயக்கம்: ஊர்கூடி தேர் இழுக்க ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 5– ‘‘2 ஆயிரத்து 403 ஹெக்டேர் பரப்பளவில், புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கி இருக்கிறோம். 1,207 ஹெக்டேர் தரங்குன்றிய சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுத்திருக்கிறோம். முக்கியமான “நீல கார்பன்” சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு புத்துயிர் வழங்கியிருக்கிறோம். இந்த வரிசையில், மன்னார் வளைகுடாவில் இருக்கும் தனுஷ்கோடியில், தமிழ்நாட்டின் முதல் கிரேட்டர் ஃபிளமிங்கோ சரணாலயம் குறித்த அரசு அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமையடைகிறேன்’’ என்று முதல்வர் முக ஸ்டாலின் இன்று தெரிவித்தார். பல்லுயிர்ப் பெருக்கம், காலநிலை மாற்றம் – இந்த […]

Loading