செய்திகள்

ஸ்டாலினின் ஆட்சி குறித்து மக்களிடம் மகிழ்ச்சி இருக்கு: மனம் திறந்த நடிகர் வடிவேலு

சென்னை, அக். 22– தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து, மக்களிடம் மகிழ்ச்சி இருப்பதை பார்க்க முடிகிறது என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து நடிகர் வடிவேலு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:– “ஸ்டாலின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீங்க..?” “அண்ணே… கவனத்துலவைங்க. நான் அரசியல் பேசல. மக்கள் கிட்டே ஒரு சந்தோசம் இருக்கு, சனங்களுக்கு நம்பிக்கை வருது. மக்கள் அவங்களை ஈஸியா அணுக முடியுது. ஸ்டாலின் அய்யா நடைப்பயிற்சி செய்யும்போதுகூட […]

நாடும் நடப்பும்

‘புலம்பெயர்‌ தமிழர்‌ நல வாரியம்‌’ : தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க ஸ்டாலின் அமைக்கும் அரண்

ஆர். முத்துக்குமார் நாம் வளர்ந்த பொருளாதாரமாக உயர்ந்து வரும் நிலையில் தொழிலாளர்களின் நலன் மீது அக்கறை மிக அவசியமாகிறது. ஐடி துறையில் மாதச்சம்பளம் லட்சத்தில் இருந்தாலும் அங்கு தினக்கூலி துப்புரவுத் தொழிலாளிகள் வசதிகள் உயர்ந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. அந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தரப் பணி தரப்படாமல் ஒப்பந்த அடிப்படையில் வேறு ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருப்பதும் அவர்களுக்கு சம்பள வரைவுகள் மிகக்குறைவாகவே இருப்பதையும் பார்க்கிறோம். மேலும் பணி நீக்கம் பணிச்சுமை போன்ற பல சிக்கல்கள் அவர்களுக்கு உண்டு! […]

செய்திகள்

ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு: யூ–டியூபர் சாட்டை துரைமுருகன் கைது

கன்னியாகுமரி, அக். 11– முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரியில் மலைகளை உடைத்து கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகவும், தமிழக அரசு இயற்கை வளங்களைக் காக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் யூடியூபர் […]

செய்திகள்

சென்னை எழும்பூரில் ரூ.6.47 கோடி செலவில் ‘காவல் அருங்காட்சியகம்’

ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, செப்.28– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28–ந்தேதி) சென்னை, எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடம் 6 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். சென்னை மாவட்டம், எழும்பூரில் பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடமானது, தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக 24,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தரைதளத்தில் […]

செய்திகள்

தமிழ்நாட்டில் ‘போயிங்’ நிறுவனத்திற்கு விமான பாகங்கள் வழங்கும் ஒப்பந்தம்

ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது சென்னை, செப்.27– தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (27–ந் தேதி) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்குமுக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்க சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்-டுக்கானஒப்பந்த உத்தரவை போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குனர் அஸ்வனி பார்கவா வழங்க […]

செய்திகள்

‘நீட்’, ‘டாஸ்மாக்’ போராட்ட 868 வழக்குகள் வாபஸ்: ஸ்டாலின் உத்தரவு

சென்னை, செப்.27– அண்ணா தி.மு.க. ஆட்சியில் ‘நீட்’, ‘டாஸ்மாக்’ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் பெற இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.6.2021 அன்று சட்டப்பேரவையில், கவர்னர் உரையின் மீதான விவாதத்திற்கு அளித்த பதிலுரையில் “கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் […]

செய்திகள்

சென்னையில் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்: ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை, செப். 19– தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் இதுவரை 54 சதவீதம் பேருக்கு, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3ம் அலை பரவலை தடுக்கும் வகையில், ஓரிரு […]

செய்திகள்

அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை திட்டம்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை, செப்.11– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11–ந் தேதி) சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் ஒருகாலப் பூஜைத் திட்டத்தின்கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் பி.கே. சேகர்பாபு 24 மணி நேரமும் செயல்படக்கூடியவர். எள் என்பதற்கு முன் எண்ணையாக நிற்கக் கூடியவர். அவர் சேகர்பாபு அல்ல. ‘செயல்பாபு’ என்று அமைச்சர் சேகர்பாபுவின் விரைவான செயல்பாட்டுக்கு முதலமைச்சர் புகழாரம் […]

செய்திகள்

திருவிழாக்கள், அரசியல், மத கூட்டங்களுக்கு அக். 31–-ந் தேதி வரை தடை: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, செப்.10- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் திருவிழாக்கள், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை அடுத்த மாதம் அக்டோபர் 31–-ந் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் வாழ்வாதாரங்களுக்காக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கேரளாவில் ஓணம், பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு தொற்று அதிகமானதை காரணம் காட்டி, தமிழகத்திலும் […]

செய்திகள்

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி: ஸ்டாலின் வரவேற்பு

சென்னை, செப். 10– தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றி வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நாகாலாந்து ஆளுநராக இருக்கும் ரவீந்திர நாராயண் ரவி, புதிய தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநர் பொறுப்பு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் பன்வாரிலால் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்தார். இந்த நிலையில் நேற்று குடியரசுத் தலைவர் வெளியிட்ட உத்தரவில் இந்த ஆளுநர் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. […]