ஷேக் ஹசீனா மவுனம் கலைத்தார் புதுடெல்லி, ஆக. 14– வங்கதேச வன்முறையில் தியாகிகள் அவமதிக்கப்பட்டனர். எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் கடந்த மாதமும், இம்மாதமும் நடத்திய போராட்டங்கள் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களாக மாறியது. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், காவல்துறையினர், அப்பாவி பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். […]