சிறுகதை

வேதம் புதுமை செய் –ஜூனியர் தேஜ்

கலப்பு மணக் காவலன், பெண்ணியப் பிதாமகன், எழுத்து சீர்திருத்தர் என்றெல்லாம் விளக்கப்படும், அச்சு ஊடகங்களின் முடிசூடா மன்னன், பல ‘லட்ச’க் கணக்கான வாசகர்களின் நல்லாதரவும் பற்பல மாநில விருதுகள், தேசிய விருதுகளுக்கெல்லாம் சொந்தக்காரருமான புரட்சி எழுத்தாளர் ‘புதியோன்’ பிரபல ‘டி.வி சேனலின்’ நேர்காணலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். ‘கேமரா’ முன் நடித்துப் பழக்கமில்லாத அவர் நிலைக் கண்ணாடி முன் மிடுக்காய் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் அமர்ந்தும் ‘சேனல்’ன் கேள்விகளுக்காகத் தயார் செய்த புரட்சிகரமான பூடகமான விடைகளைப் பேசி…, […]