வாழ்வியல்

செரிமானத்தைச் சீராக்கும் முள்ளங்கி

வெள்ளை முள்ளங்கியில் அதிகளவில் நார்ச்சத்துக்களும் தண்ணீரும் உள்ளன. நார்ச்சத்து மற்றும் தண்ணீர் இவை இரண்டும் குடல் அசைவுகளுக்கு உதவுவதால் மலச்சிக்கலை தடுக்க உதவும் . மேலும் வெள்ளை முள்ளங்கி உங்கள் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை எதிர்த்துப் போராட உதவும். முள்ளங்கி பூஞ்சை எதிர்ப்பு குணத்தை கொண்டுள்ளது. மற்ற முள்ளங்கிகளைப் போலவே வெள்ளை முள்ளங்கி ஒரு இயற்கையான பூஞ்சை எதிர்ப்பு காய்கறியாகும். இது பெண்ணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் வாய்வழி ஈஸ்ட் தொற்றுகள் போன்றவற்றை […]

வாழ்வியல்

வெள்ளை முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்

வெள்ளை முள்ளங்கி பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறந்த காய்கறியாக விளங்குகிறது. வெள்ளை முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துக்களைைக் காண்போம். 100 கிராம் வெள்ளை முள்ளங்கி கீழ்க்கண்ட ஊட்டச்சத்தை அளிக்கின்றன . தண்ணீர் – 91.59 கிராம் கலோரி – 43 கிலோ கலோரி புரதம் – 0.65 கிராம் கொழுப்பு – 3.21 கிராம் கார்போஹைட்ரேட் – 3.3 கிராம் நார்ச்சத்து – 1.5 கிராம் சர்க்கரை – 1.76 கிராம் கால்சியம் (Ca) – 17 […]

வாழ்வியல்

உடல் எடையைக் குறைக்கும் வெள்ளை முள்ளங்கி

வெள்ளை முள்ளங்கி குறைவான கலோரிகளையும் மற்றும் அதிகமான நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அது உடல் எடையை குறைக்க உதவும் . மேலும் இது மாவுச்சத்து இல்லாத காய்கறியாக இருப்பதால் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் கொண்டுள்ளது. குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பது உங்களுக்கு வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே முள்ளங்கி போன்ற மாவுச்சத்து இல்லாத காய்கறிகளைச் சாப்பிடுவது ஆரோக்கியமாக உங்கள் எடையைப் பராமரிக்க உதவும்.

வாழ்வியல்

புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் வெள்ளை முள்ளங்கி

வெள்ளை முள்ளங்கி புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. வெள்ளை முள்ளங்கியில் பாலிபினால்கள் போன்ற பினோலிக் சேர்மங்கள் நிறைய உள்ளன. இந்த சேர்மங்கள் கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. இந்த சேர்மங்கள் முள்ளங்கியின் தோல் மட்டும் வேரில் அதிகமாக உள்ளதால் அவற்றை தோலுடன் உண்பது நல்லது.

வாழ்வியல்

சிறுநீரில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முள்ளங்கி

முள்ளங்கி குத்துச் செடி இனத்தைச் சேர்ந்தது. இதில் 3 வகைகள் உள்ளன. அவை 1. வெள்ளை முள்ளங்கி 2. சிவப்பு முள்ளங்கி 3. மஞ்சள் முள்ளங்கி ஆகியவைகள் ஆகும். முள்ளங்கியில் சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் சத்தும் உள்ளன. இது வயிற்றில் ஏற்படும் பல தொல்லைகளைக் குணப்படுத்துகிறது. இது பசியை அதிகமாக்கச் செய்வதோடு, சாப்பிடுவதில் விருப்பத்தையும் உண்டாக்கும். மலச்சிக்கலையும் போக்கும். வெள்ளை முள்ளங்கி குளிர்ச்சித் தன்மை பொருந்தியது. அதனால் உஷ்ண தேகம் உள்ளவர்களும் மூல நோய்க்காரர்களும் இதைத் தாராளமாகச் […]