சிறீநகர், ஏப்.21– ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் ஆற்றின் அருகில் இருக்கும் தரம்குண்ட் கிராமத்தில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் புகுந்ததில் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. மேலும், 25 முதல் 30 வீடுகள் சேதமடைந்தன. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு மேலும் […]