புடாபெஸ்ட், செப். 12– செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா முதல் வெற்றியை பதிவு செய்தார். 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்றுள்ளன. மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை சேர்க்கும் அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றும்.போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை […]