செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜன. 4– சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலமான சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் எப்.ஐ.ஆர் கசிந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]

Loading

செய்திகள்

தேர்வு பயம்: டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!

புதுடெல்லி, டிச. 22– டெல்லி ரோகினி பகுதியில் கடந்த வாரம் இ-மெயிலில் 2 பள்ளிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் அந்தப் பள்ளியின் மாணவர்களே என டெல்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். டெல்லி சிறப்பு காவல்படையினர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை செய்தபோது, அவை அந்தந்த பள்ளிகளில் படிக்கும் இரு மாணவர்களால் விடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இரு மாணவர்களும் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்தி வைப்பதற்காக இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரையும் […]

Loading

செய்திகள்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்

புதுடெல்லி, டிச. 18– விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அண்மைக் காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மிரட்டலானது உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் விடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் கடுமையாக அவதிப்படுவதோடு, அவர்களின் பயணமும் கால தாமதாகிறது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி […]

Loading

செய்திகள்

டெல்லியில் ஒரே நாளில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் தீவிர சோதனை

புதுடெல்லி, டிச. 9– டெல்லியில் 40 பள்ளிகளுக்கு ஒரே நாளில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதுமே கடந்த சில வாரங்களாக பள்ளி, கல்லூரிகள், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதர் மேரி, கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் பள்ளி, பிரிட்டிஷ் […]

Loading

செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: பரபரப்பான வேளச்சேரி ரெயில் நிலையம்

சென்னை, அக். 23– சென்னை வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொலைபேசி அழைப்புகள், இ–மெயில்கள் மூலமாக வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் அழைப்புகள் வருவது சாதாரணமாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள வேளச்சேரி ரயில் […]

Loading

செய்திகள்

சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விமான பயணிகள் மத்தியில் அச்சம் சென்னை, அக். 21– நாடு முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆயுதப் பூஜை, துர்கா பூஜை, தீபாவளி எனப் பல்வேறு பண்டிகையின் காரணமாக கடந்த 10 நாள்களாக உள்நாடு மற்றும் […]

Loading

செய்திகள்

ஏர் இந்தியா, விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனைக்கு பின் புரளி என தகவல்

ஜெய்ப்பூர், அக். 19– துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. தீவிர பரிசோதனைக்குப் பின்னர் விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. ஏர் இந்தியா விமானம் IX–196 துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது இன்று அதிகாலை 12.45 மணியளவில் அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ஜெய்ப்பூர் விமானநிலைய காவல்நிலையத்துக்கு தகவல் வந்தது. […]

Loading

செய்திகள்

ஜெய்ப்பூரில் இருந்து துபாய் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெய்ப்பூர், அக். 19– ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து 189 பேருடன் புறப்பட்ட விமானம், உடனடியாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜெய்ப்பூருக்கு திரும்பிய விமானம் இந்த […]

Loading

செய்திகள்

மும்பையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்

135 பயணிகள் பத்திரமாக மீட்பு மும்பை, ஆக. 22– நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியவுடன் பயணிகள் உடனடியாக பத்திரமாக மீட்கப்பட்டனர். மும்பை விமான நிலையத்திலிருந்து, ஏஐ 657 எனும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் அதிகாலை 5.45 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டது. அந்த விமானத்தில் 135 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக […]

Loading

செய்திகள்

கேரள தோட்டத்தில் தங்க புதையல்

கண்ணூர், ஜூலை 14–- கேரள மாநிலம் கண்ணூர் அருகே செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு மழைநீர் வடிகால் அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டினர். தோட்டத்தின் ஒரு பகுதியில் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது மண்ணுக்குள் குடம் புதைந்து இருப்பதை பார்த்தனர். அதை தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர். இருப்பினும் அது வெடிகுண்டாக இருக்கலாம் என பயந்துபோன தொழிலாளர்கள், அதற்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்க்கவில்லை. இதுகுறித்து கண்ணூர் மாநகர போலீசாருக்கு […]

Loading