செய்திகள்

தொடரும் விவசாயிகள் போராட்டம்: 3 மாநிலங்களில் ரூ.815 கோடி இழப்பு

டெல்லி, மார்ச் 23– டெல்லி விவசாயிகள் போராட்டம் காரணமாக மூன்று மாநிலங்களில் மட்டும் மத்திய அரசுக்கு 815 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக, டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில், கடந்த 117 நாட்களாக அரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் […]

செய்திகள்

டெல்லியில் 101 வது நாளில் விவசாயிகளின் போராட்டம்

டெல்லி, மார்ச் 6– புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைமுறையை ஒழித்துக்கட்டுவதுடன், தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால் கையேந்தி நிற்கச்செய்து விடும் என கூறி, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். […]

நாடும் நடப்பும்

திஷா விவகாரம் சொல்லும் பாடம்

நாடே பார்த்து அதிர்ந்த டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளின் கைவரிசை இருக்கிறது என்று பாரதீய ஜனதா கட்சியினர் கூறி வந்தாலும் சமூக வலைதளங்களின் உதவி பெரிதாக இருந்தது என்பதை நாடே அறியும். பலமுறை பல்வேறு சந்தர்ப்பங்களில் யாருடைய தலைமை அழைப்பு ஏதுமின்றி ‘ திடீர் ‘ என ஒரு பெரும் கும்பல் கூட பெரும் கலவரமாக மாறி, பலவித விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் அரங்கேறி விடும் அபாயத்தை பார்த்துள்ளோம். அந்த பட்டியலில் முன்னணியில் இருப்பது ‘அரபு வசந்தம்’ […]

செய்திகள்

40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் முற்றுகை; இந்தியா கேட் அருகே விவசாயம்

டெல்லி, பிப். 24– புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி, உத்தரப் பிரதேச எல்லைகளில் 3 மாதங்களாக போராடும் விவசாயிகள், சாலை மறியல், ரயில் மறியல் என அடுத்தடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த நிலையில், […]

செய்திகள்

விவசாயிகளுடன் பேச தயார்: பார்லிமெண்ட்டில் மோடி பேச்சு

டெல்லி, பிப். 8– புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பார்லிமெண்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி மாநிலங்களவையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரைக்கு உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– நாடு தற்போது வளர்ச்சி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் பார்வை […]

செய்திகள்

இன்று விவசாயிகள் நடத்திய நாடு தழுவிய ‘சக்காஜாம்’ சாலை மறியல் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று விவசாயிகள் நடத்திய நாடு தழுவிய ‘சக்காஜாம்’ சாலை மறியல் போராட்டம் டெல்லியில் 50 ஆயிரம் போலீசார் குவிப்பு புதுடெல்லி, பிப். 6 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் ‘சக்கா ஜாம்’ சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் மட்டும் சுமார் 50 ஆயிரம் போலீசார், துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் […]

செய்திகள்

ஆணி, முள்வேலி இடத்தில் பூக்களை நட்ட விவசாயிகள்

டெல்லி, பிப். 6– போராடும் விவசாயிகளுக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் சாலைகளில் ஆணிகள் மற்றும் முள் வேலிகள் அமைத்துள்ள நிலையில், அதே இடத்தில் விவசாயிகள் பூக்களை நட்டு பரிசளிக்கின்றனர். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் தொடரும் நிலையில் சிங்கு எல்லையில் கடந்த குடியரசு தினத்தன்று கலவரம் […]

செய்திகள்

டெல்லி விவசாயிகள் போராட்டம்: அவதூறு செய்தி வௌியிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு

புதுடெல்லி, பிப். 4– விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பின் போலி செய்திகளை பரப்பிய சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக டெல்லி போலீசார் 4 வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திக்ரி மற்றும் சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் நடந்து வரும் இந்த போராட்டம் 71வது நாளாக இன்றும் தொடருகிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் எல்லையில் […]

செய்திகள்

டெல்லி வன்முறை: நடிகர் தீப் சித்து உள்பட 4 பேர் பற்றி துப்பு தந்தால் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு

குடியரசு தினத்தில் நடந்த டெல்லி வன்முறை: நடிகர் தீப் சித்து உள்பட 4 பேர் பற்றி துப்பு தந்தால் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு புதுடெல்லி, பிப்.3– குடியரசு தினத்தன்று (ஜனவரி 26–ந் தேதி) நடந்த வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் தீப் சித்து மற்றம் 4 பேர் பற்றி தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று டெல்லி போலீஸார் அறிவித்துள்ளனர். வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த […]

செய்திகள்

போராட்டம் தூண்டும் ஹேஸ்டேக்: 250 டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

சென்னை, பிப். 2– போராட்டத்தை தூண்டும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தியதாக, 250 டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், விவசாயிகள் போர்வையில் ஊடுருவிய விஷமிகளால் ஏற்பட்ட வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 250 கணக்குகள் முடக்கம் இதனால்,இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க எல்லைப் பகுதியில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து, வன்முறை பரவாமல் இருக்க […]