கோவை, டிச. 17– இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் பதுங்கி இருந்த கொம்பேறிமூக்கன் பாம்பு, திடீரென வெளியே வந்ததால் தொழிலாளி அதிர்ச்சியடைந்தார். கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்துள்ள புதூரில் ஸ்ரீ ஹரி என்ற இருசக்கர வாகன பழுது பார்க்கும் நிலையம் இயங்கி வருகிறது. இன்று காலை போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி முனி ராஜ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அங்கு பழுது பார்க்க எடுத்துச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வாகனத்தைப் […]