வெள்ளத்தால் சேதமடைந்த 7 அரசுப் பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிப்பு விழுப்புரம், டிச. 9– பென்ஜல் புயல் வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. ஆனால் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த 7 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மறுஅறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பென்ஜல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை யால் விழுப்புரம் மாவட்டத்தில் கடும் வெள்ளச்சேதம் […]