செய்திகள்

கடலூரில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி:

கடலூர், ஏப்.18- கடலூரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஒரு சிறந்த விடியலின் மாற்றங்களை நோக்கி பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னேற்றும் வகையில் […]

Loading

செய்திகள்

பொது மக்கள் ஏமாறுவதை தடுக்க வங்கி அதிகாரிகள், போலீசார் இணைந்து

வங்கி அதிகாரிகளுடன் போலீஸ் கூட்டு ஏற்பாடு சென்னை, ஏப்.17- பொது மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் இழப்பதை தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில் ஒன்று பொதுமக்கள் உஷார்படுத்த அடிக்கடி சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள். பொது மக்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து தினமும் நூதன முறையில் ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்து வருகிறார்கள். […]

Loading

செய்திகள்

வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்: கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தல்

வேலூர், ஏப்.16- வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தினார். வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, மாவட்ட சுகாதார அலுவலர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆரோக்கியமாக வாழ

தலையங்கம் பிப்ரவரி மாதம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதம் நிறைவுக்கு வரும் இந்தத் தருணத்தில் நம் ஆரோக்கியத்தை முன்னுரிமை தந்து சிறு மாற்றங்களின் மூலம் வாழ்வின் தரத்தை மேம்படுத்துவது பற்றி சிந்திக்க ஒரு நேரமாகும். இதைத் தொடுத்துக் கூறும் டாக்டர் ஸ்பூர்த்தி பிரோமேட் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சீரான, சிறிய மாற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். டாக்டர் ஸ்பூர்த்தி தரும் அறிவுரை, உடனடியாக பெரிய மாற்றங்களை செய்வதற்கு பதிலாக […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு வனத்துறை சார்பில் ‘மலையேற்றத் திட்டத்தை’ தொடங்கிவைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, அக் 25 இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு வனத்துறை சார்பில் மலையேற்றத் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்புக்கு வலுசேர்க்கும் விதமாகவும் தமிழ்நாடு வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் சார்பில் தமிழ்நாடு மலையேற்றத் திட்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மலையேற்றத் திட்டம், […]

Loading

Uncategorized செய்திகள்

கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி

கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு மாத விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கண்காட்சியை கங்கா மருத்துவமனையின் தலைவர் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் தொடங்கி வைத்தார். தற்போதைய சூழலில் மார்பக புற்றுநோய் பெண்களிடம் மிகவும் பொதுவாக காணப்படும் ஒரு நோயாக உள்ளது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளித்தால் அதை எளிதாக குணப்படுத்தி விடலாம். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருக்காது. அதை வலியுறுத்தி கங்கா மருத்துவமனை சார்பில் […]

Loading

செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணி – போஷன் அபியான் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கண்காட்சி

வேலூர், செப் 10 வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் துறை சார்பில் போஷன் அபியான் திட்டத்தின்கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் வே.இரா. சுப்புலெட்சுமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் பணிகள் துறை சார்பில் போஷன் அபியான் திட்டத்தின்கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா (போஷன் மா) செப்டம்பர் 01 முதல் 30 வரை வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைத்து அங்கன்வாடி மையங்களிலும் கொண்டாடப்படுகிறது. […]

Loading