சென்னை, ஜன. 01– வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அதன்படி, இந்த மாதத்திற்கான மாற்றம் செய்யப்பட்ட விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் […]