செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 2-வது நாளிலேயே அபார வெற்றி: இந்திய அணியின் சாதனை

அமதாபாத், பிப். 26– இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 2-வது நாளிலேயே இந்தியா அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா –- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல் – -இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து முதல்இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல்இன்னிங்சை […]

செய்திகள்

வலுவான நிலையில் 2வது நாள் ஆட்டத்தை தொடங்கும் இந்தியா

அமதாபாத், பிப். 25– இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் 2வது நாள் ஆட்டத்தை தொடங்குகிறது.இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்று 1 –-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா- – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக (பிங்க் பந்து […]

செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி நாளை துவக்கம்

உலகிலேயே மிகப்பெரிய அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி நாளை துவக்கம் பிங்க் நிற பந்தில் பகல் – இரவு ஆட்டம் அகமதாபாத், பிப். 23– இந்தியா, இங்கிலாந்து மோதும் 3வது பிங்க் பால் பகல், இரவு டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொட்டேரா சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இது இந்த ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டியாகும். இந்தியா, இங்கிலாந்து […]

செய்திகள்

2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி 4வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை சுருட்டியது சென்னை, பிப். 16– சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி 317 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் […]

செய்திகள்

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போதிலும் வெற்றியை நோக்கி வலுவான நிலையில் இந்தியா

சென்னை, பிப். 15– இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போதிலும் வெற்றியை நோக்கி வலுவான நிலையில் உள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 13–ந் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 6 […]

செய்திகள்

தோல்வியில் இருந்து மீண்டு வலுவாக வருவோம்: இந்திய அணியின் கேப்டன் கோலி உறுதி

சென்னை, பிப். 10– சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து மீண்டு வலுவாக வருவோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உறுதிபட கோரினார். இங்கிலாந்து அணியுடன் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 227 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:- முதல் இன்னிங்சில் பந்துவீச்சில் நாங்கள் இங்கிலாந்துக்கு போதுமான நெருக்கடியை கொடுக்கவில்லை. சில ரன்களை கட்டுப்படுத்தி அவர்களுக்கு நெருக்கடி […]

செய்திகள்

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: கோலி – 4வது இடம்; ரஹானே 8வது இடம்

துபாய், ஜன. 31– ஐ.சிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் விராட் கோலி தொடர்ந்து 4-வது இடம் பிடித்துள்ளார். துணை கேப்டன் ரஹானே 8வது இடம் பிடித்துள்ளார். சா்வதேச கிரிக்கெட் கவுன்சில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வீரர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதன்படி, பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரா்கள் ஸ்டீவன் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், மாா்னஸ் லபுசான் 878 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் […]

செய்திகள்

சர்வதேச அளவில் 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு: ஐ.சி.சி. அறிவிப்பு

துபாய், டிச.29- கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வாகியுள்ளார். சிறந்த உத்வேக விருது தோனிக்கு வழங்கப்பட்டது.சர்வதேச கிரிக்கெட்டில் 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி வரை 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆன்-லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தியது. உலகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வாக்களித்தனர். இதற்கான முடிவை ஐ.சி.சி. […]

செய்திகள்

10 ஆண்டுகளுக்கான இந்திய கனவு அணி: எம்.எஸ்.தோனி, கோலிக்கு கேப்டன் பதவி

மும்பை, டிச. 28– ஐசிசியின் 10 ஆண்டுகளுக்கான இந்திய கனவு அணியின் கேப்டனாக டெட்ஸ் அணிக்கு விராட் கோலியும், ஒரு நாள் மற்றும் டி20 அணிக்கு எம்.எஸ்.தோனியும் தேர்வாகியுள்ளனர். 2020ம் ஆண்டு நிறைவடைவதையொட்டி, ஐசிசி பல நாடுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்து இந்த தசாப்தத்தின் (10 ஆண்டுகள்) ஒருநாள், டி20, டெஸ்ட் கனவு அணிகளை அறிவித்துள்ளது. ஐசிசி அறிவித்த கனவு அணியில், இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, ஒருநாள் போட்டிகள் மற்றும் […]

செய்திகள்

2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடக்கம்: வெற்றி முனைப்பில் இந்தியா

மெல்போர்ன், டிச. 25 இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இதில் வெற்றி பெறம் முனைப்பில் இந்திய அணி தொடர் பயிற்சி எடுத்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான […]