செய்திகள்

நடுவானில் குலுங்கிய விமானம்: ஏர் யூரோப்பாவில் பயணித்த 40 பயணிகள் காயம்

பிரேசிலியா, ஜூலை 2– ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால் அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து புறப்பட்ட ஏர் யூரோப்பா விமானத்தில் 325 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் போயிங் 787–9 ட்ரீம்லைனர் ரகத்தை சார்ந்தது. விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். விமானம் குலுங்கியது […]

Loading

செய்திகள்

டெல்லியில் 4 மணி நேரம் கொட்டிய கனமழை: விமான நிலையக் கூரை இடிந்து ஒருவர் பலி

டெல்லி, ஜூன் 28– டெல்லியில் இன்று காலையில் பெய்த தொடர் கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர். கிழக்கு டெல்லி முதல் தெற்கு டெல்லி வரை தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ளது. விவேகானந்தர் முகாம், கோவிந்த்புரி மற்றும் ஓக்லா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரி வந்தவுடன் ஒரு குடம் தண்ணீருக்காக ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் நிலையும் காணப்படுகிறது. […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜூன் 1– சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் ’6இ – 5134’ என்ற விமானம் மும்பை செல்ல தயாராக இருந்தது. இந்த நிலையில், 172 பயணிகளுடன் மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அவசர தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் காலை […]

Loading

செய்திகள்

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவல்; கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை

கோவை, மே 23– கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் அனைத்து நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் 5 நாட்களும் சர்வதேச விமானங்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனை தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவில் இருந்து சர்வதேச விமானம் மூலம் கோவை வரும் பயணிகளிடம் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் […]

Loading