செய்திகள்

எரிவாயு குழாய் உடைப்பு: சீனாவில் 25 பேர் உயிரிழப்பு

பீஜிங், ஜூன் 15– சீனாவின் ஷியான் நகரத்தில் நடைபெற்ற எரிவாயு குழாய் உடைப்பு விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஊபேய் மாகாணத்தில் உள்ள ஷியான் நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எரிவாயு குழாய் உடைப்பு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமையில் 12 ஆக இருந்தது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி 25 ஆக உயர்ந்துள்ளது. ஊபேய் மாகாணத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி, விபத்து தொடர்பாகச் செய்தியாளரைச் சந்தித்த போது […]

செய்திகள்

ஆம்புலன்ஸ் மரத்தில் மோதல்: கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி, ஜூன் 10– கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணியான ஜெயலட்சுமி என்பவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக கொண்டு சென்றிருந்தனர். ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது, ஆம்புலன்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர […]

செய்திகள்

லிபியாவில் ரப்பர் படகு கவிழ்ந்து 130 பேர் பலி

லிபியா, ஏப். 24– லிபியாவில் 130 பேருடன் சென்ற ரப்பர் படகு கடலில் கவிழ்ந்ததில், அனைவரும் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. 34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்காலப் பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. இதனால் லிபியாவில் உள்ள வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக லிபியா மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.‌ இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகு மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு […]

செய்திகள்

பட்டாசு கடை விபத்தில் 2 மகன்கள் பலி: ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

வேலூர், ஏப். 21– பட்டாசு கடை விபத்தில் தந்தை மற்றும் 2 மகன்களை இழந்த பெண், இன்று அதிகாலையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையம் பகுதியில் மோகன் (வயது 55) என்பவரது பட்டாசுக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு 2 நாட்களுக்கு முன், பிற்பகலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடையின் உரிமையாளரான மோகன் மற்றும் அவரது மகள் (வித்யாலெட்சுமி) வழி பேரன்கள் தேஜஸ் (வயது […]