த.வெ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு கோவை, ஏப். 27– கோவையில் விஜய் வருகையின் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், விமான நிலையத்தில் டிராலிகள் மற்றும் தடுப்புகளை சேதப்படுத்தியதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். முதல்கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை […]