செய்திகள்

வங்கி கணக்கில் அதிகளவு பணப் பரிவர்த்தனை:3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை

திருவள்ளூர், செப். 12– வங்கிக் கணக்குகளில் அதிக அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தொடர்பாக பள்ளிப்பட்டு அருகே இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை, மோட்டூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்களின் வங்கி கணக்குகளில் அதிகளவில் பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது அமலாக்கத் துறையினரின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இன்று காலை 8.30 மணியளவில், அமலாக்கத் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர், […]

Loading

செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: விசாரணையை ரத்துசெய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை, ஆக. 30– டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் விடைத்தாளை மாற்றி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தவறான வழக்கு என்றும், இந்த வழக்கில் தவறாக எண்ணி தன்னை […]

Loading

செய்திகள்

பார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை, ஆக. 28– சென்னையில் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெறுகிறது. சென்னை தீவுத்திடல் பகுதியில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள், பார்முலா 4 கார் பந்தய போட்டிகள் நடைபெற உள்ளது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த பிப்ரவரியில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும், இடையூறும் இல்லாமல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கார் பந்தயம் நடத்த […]

Loading

செய்திகள்

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை: தேசிய மகளிர் ஆணையக் குழு விசாரணை

புதுடெல்லி, ஆக. 13– கொல்கத்தாவில் பெண் டாக்டரின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த மருத்துவமனையில் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி டாக்டர்கள், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது. டாக்டர் கொலை வழக்கில் தொடர்புடையதாக […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விசாரணை

சென்னை, ஜூலை 20– பெரம்பூர் பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 11 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது ஆயுதங்களை பறிமுதல் செய்ய திருவேங்கடம் என்ற ரவுடியை அழைத்து சென்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் வேறு யாராவது மூளையாக செயல்பட்டார்களா?, பெரும் அளவில் பணம் ஏதாவது கைமாற்றப்பட்டு கூலிப்படைகள் மூலம் […]

Loading

செய்திகள்

இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவிலை மீண்டும் கட்டிக் கொடுக்க அறநிலையத்துறை சம்மதம்

சென்னை, ஜூலை 10– இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் மீண்டு கட்டிக் கொடுக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிள்ளையார் கோவிலை காணவில்லை என தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐ கோர்ட் முடித்து வைத்துள்ளது. சென்னை, என்.எஸ்.சி. பொஸ் சாலையில் வ.உ.சி. நகரில் அமைந்திருந்த செல்வ சுந்தர விநாயகர் கோவிலை காணவில்லை எனவும், நூறாண்டு பழமையான இந்த கோவிலை இடித்து விட்டு, அங்கு மாநகராட்சி, குப்பை தொட்டிகளை வைத்துள்ளதாக கூறி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த […]

Loading

செய்திகள்

ஹாத்ரசில் 121 பேர் உயிரிழந்ததற்கு அதிக கூட்டம் கூடியதே காரணம்

விசாரணை குழு அறிக்கை தாக்கல் லக்னோ, ஜூலை 9– உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரசில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு அதிக கூட்டம் கூடியதே காரணம் என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் கடந்த 2ம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. சுராஜ்பால் என்கிற போலே பாபா என்பவர் இந்த சொற்பொழிவில் பங்கேற்று பேசினார். இதில் 80 ஆயிரம் பேர் மட்டுமே […]

Loading

செய்திகள்

கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் 2 குழந்தைகளுடன் இளம்பெண் பிணம்: கொலையா? போலீசார் விசாரணை

கோவை, ஜூலை 8– கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் 2 குழந்தைகளுடன் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு ஹரிணி (9), ஷிவானி (3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புஷ்பா வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தங்கராஜ் வேலைக்கு […]

Loading

செய்திகள்

தமிழகத்தை அதிரவைத்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள்

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை ஐகோர்ட் டிஜிபி, கலெக்டர் பதிலளிக்க உத்தரவு சென்னை, ஜூலை 1– தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி […]

Loading

செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சாத்தூர், ஜூன் 29– சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் […]

Loading