வாழ்வியல்

ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையைக் கரைக்கும் வாழைப்பூ

வாழைப்பூ சமைத்துச் சாப்பிட்டால் இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைத்துவிடும் வாழைப்பூவின் மருத்துவப் பயன்களை அறிய தொடர்ந்து படியுங்கள் . இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது வாழைப்பூ. உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து அதனுடன் நெய் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.