கர்தூம், மார்ச் 26– சூடான் நாட்டில் நடைபெற்ற வான்தாக்குதலில் 54 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு சூடான் நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகின்றார். அவருக்கு அடுத்து ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி […]