செய்திகள்

வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி

அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் துவக்கி வைத்தனர் திருப்பத்தூர், ஜன. 25– வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரையிலான 4 புதிய நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்கு அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் தொடங்கி திருப்பத்தூர், காரப்பட்டு ஊத்தங்கரை வரையிலான தேசிய நெடுஞ்சாலை 45 கி.மீ. தூரம் தற்போது உள்ள இருவழிச்சாலை சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கும் சாலைப்பணியினை ஜோலார்பேட்டை […]

செய்திகள்

வாணியம்பாடியில் ரூ.6 கோடியில் தோல் மேம்பாட்டு மையம்: எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை, ஜன.23– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (22–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கூட்டு முனைப்பில் முதற்கட்டமாக 6 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோல் பதனிடுதல் பிரிவுக்கான பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், 3 கோடியே 34 லட்சம் ரூபாய் […]

செய்திகள்

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 3031 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

திருப்பத்தூர், ஜன. 1– வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 3031 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் நிலோபர் கபீல் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 20 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளை சார்ந்த 3031 மேல்நிலைபள்ளி மாணவ மாணவிகளுக்கு வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலங்காயம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் +1 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 47 […]

செய்திகள்

வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணி: அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் அடிக்கல்

திருப்பத்தூர், டிச. 21– வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம் கட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் வாணியம்பாடி நகராட்சியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் வாணியம்பாடி கோட்டாட்சியர் புதிய கட்டடம் […]