செய்திகள்

புகார்களினால் 59 ஆயிரம் உள்ளடக்கங்களை நீக்கியது கூகுள்

டெல்லி, ஜூலை 1– இந்திய பயனர்களின் புகார்களைத் தொடர்ந்து, கடந்த மாதம் 59,350 உள்ளடக்கங்களை கூகுள் நீக்கியுள்ளதாகக் கூறியுள்ளது. மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது. இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25ஆம் தேதிக்குள் சமூக வலைதள நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், அவற்றுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்காது என்றும், ஏதேனும் புகார் வரும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதிகளில் கூறப்பட்டிருந்தது. […]

செய்திகள்

இந்திய வைரஸ்’ எனும் சொற்களை சமூக வலைதளங்களில் நீக்க மத்திய அரசு கடிதம்

டெல்லி, மே 22– இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் என்ற தவறான பெயரை நீக்க வேண்டும் என்று, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து அனைத்து சமூக ஊடகங்களுக்கும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:– இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் எனும் வார்த்தையை உடனடியாக உங்கள் தளத்திலிருந்து நீக்க வேண்டும். இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் எனும் […]

செய்திகள்

புதிய ப்ரைவஸி கொள்கை:‘வாட்ஸ்அப்’ மீது சட்டப்படி நடவடிக்கை ?

புதுடெல்லி, மே. 20- வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கையானது நியாயமற்றது என்றும் அந்தக் கொள்கையை வாட்ஸ்அப் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதில், வாட்ஸ் அப்பில் பகிரப்படும் தகவல்கள், அதன் தாய் […]

செய்திகள்

வாட்ஸ்அப்பின் புதிய ப்ரைவசி கொள்கைகளை ஏற்காதவர்களுக்கு வசதிகள் குறையும்

புதுடெல்லி, மே 11- தனது புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்காதவர்களுக்கான வசதிகள் குறையும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகம் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியாக ‘வாட்ஸ்அப்’ உள்ளது. நாட்டில் 53 கோடி பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், தனது சேவை விதிகள், தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்வதாக இந்நிறுவனம் கடந்த ஜனவரியில் அறிவித்தது. பயனாளர்களின் தகவல்களை தனது தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ளவே இந்த ஏற்பாடு என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், […]