“நம்ம புஞ்சைல தலமாரி நிக்கிற ஒரு தென்ன மரத்தையும் நடு கொல்லைல நிழலடிச்சிக்கிட்டு நிக்கிற வேப்ப மரத்தையும் நீங்க கிரயத்துக்குக் கொடுக்கப்போறதா முனியன் சொன்னான்..” – மர வியாபாரி வெங்கடாசலம் பட்டும் படாமலும் கேட்டான். சில நொடிகள் அமைதிக்குப் பிறகு “குடுக்கறதுதான்.. தேவையை அனுசரிச்சி ஒண்ணோ, இல்ல ரெண்டையுமோ கொடுப்பேன். அந்நேரம் உமக்குச் சொல்றேனே..?” – என்றார் விவசாயி சரவணன். “நல்லது..” என்று கும்பிட்டுவிட்டு இடத்தைக் காலி செய்தார் வெங்கடாசலம். சரவணன் வண்டியைப் பூட்டினார். “டடக்… டடடக்…டக்…டடக்..” […]