டெல்லி, பிப். 3– டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் வரும் 8 ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். தலைநகர் என்பதால் டெல்லியில் ஆட்சியை பிடிக்க ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் மொத்தம் 699 பேர் போட்டியிடுகின்றனர். […]