செய்திகள்

ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு:

‘டாஸ்மாக்’ அதிகாரிகள் 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் சென்னை, ஏப்.25- ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கில் ‘டாஸ்மாக்’ அதிகாரிகள் 3 பேருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் மதுபானங்கள் கொள்முதல் செய்யும் ஆலைகள், நிறுவன அலுவலகங்கள், எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து […]

Loading

செய்திகள்

டிரம்புக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு

ரூ.19 ஆயிரம் கோடி கல்வி நிதி நிறுத்தம்: நியூயார்க், ஏப். 22– டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான சுமார் ரூ.19 ஆயிரம் கோடி (2.2 பில்லியன் டாலர்) நிதி உதவியை நிறுத்தியதை எதிர்த்து, இது கல்வி சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.19 ஆயிரம் கோடி (2.2 பில்லியன் டாலர்) நிதி உதவியை நிறுத்தி வைத்தார். […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்கு

வேதாரண்யம், ஏப். 18– மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டையில் இருந்து கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஜெகன் (வயது 36), ராமகிருஷ்ணன் (67), செந்தில் (46), சாமுவேல் (31) ஆகியோர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது, நாகை மாவட்டம், கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 5 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 […]

Loading

செய்திகள்

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக குற்றப்பத்திரிகை

டெல்லி, ஏப். 16– நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை தொடர்பான வழக்கில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரால் கடந்த 2010-ஆம் ஆண்டு யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை நடத்தி வருகிறது. தற்போது யங் இந்தியன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரர்களாக சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி, மகன் […]

Loading

செய்திகள்

ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் வழக்கு: நயன்தாராவுக்கு ஆதரவான நெட்பிலிக்ஸ் மனு தள்ளுபடி

சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஜன. 28– நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நயன்தாராவுக்கு ஆதரவாக நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு […]

Loading

செய்திகள்

மதுரை டங்க்ஸ்டன் போராட்டம்: பொதுமக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் கோரிக்கை பரிசீலிக்கப்படும்

சென்னை, ஜன.11-– மதுரையில் டங்ஸ்டன் போராட்டம் தொடர்பாக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பது தொடர்பாக கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.), வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், மத்திய […]

Loading

செய்திகள்

ராமநாதபுரத்தில் மணல் கடத்திய 3 பேர் கைது: முன்னாள் டி.எஸ்.பி. உள்பட 7 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம், டிச. 1– ராமநாதபுரத்தில் மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் டி.எஸ்.பி. மற்றும் அவரது மகன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், ஏட்டு ராஜா ஆகியோர் ராமநாதபுரம் நீலகண்டி ஊரணி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த […]

Loading

செய்திகள்

அமைச்சர்கள் மீது வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திடீர் தடை

சென்னை, செப். 6– சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. பின்னர் இந்த வழக்கிலிருந்து […]

Loading

செய்திகள்

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்: 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு

விருதுநகர், செப். 4– அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் காளிக்குமார். மினிவேன் டிரைவரான இவர் பணம் கொடுக்கல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, காளிக்குமார் கொலை சம்பவத்தை கண்டித்தும் இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி அவரின் உறவினர்கள் […]

Loading

செய்திகள்

நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு: சிங்கமுத்துவுக்கு கால அவகாசம்

சென்னை, செப். 3– நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் சிங்கமுத்துவுக்கு கால அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் ஆரம்பக் காலத்தில் ஒன்றாக இணைந்தது படங்களில் நடித்திருந்தாலும், இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்கள். இருப்பினும், வடிவேலு குறித்து நடிகர் சிங்கமுத்து பேட்டிகளில் கலந்துகொள்ளும்போது அவதூற்றைப் பரப்பும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார். குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு பேட்டியில் […]

Loading