சென்னை, பிப். 1– கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 8 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தினர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். […]