புதுடெல்லி, மார்ச் 18– இந்தியாவின் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில், நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த 1969ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய அமிதாப் பச்சன், 55 ஆண்டுகளாக பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 82 வயதாகிறது. இந்திய திரைத் துறையின் மூத்த நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன் 2024–25ம் நிதி ஆண்டில் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இதில் ரூ.120 கோடி வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி […]