செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக சேர்த்து நிவாரண நிதி வழங்கப்படும்

கேரள அரசு அறிவிப்பு திருவனந்தபுரம், ஜன.17- வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவித்து நிவாரண நிதி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் திருச்சூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டகை பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 263 பேர் இறந்ததாகவும், 32 பேர் காணாமல் போனதாகவும் போலீஸ் தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த […]

Loading

செய்திகள்

வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடர் அல்ல; அதிதீவிர பாதிப்புதான்: மத்திய அரசு தகவல்

திருவனந்தபுரம், டிச. 31– வயநாடு நிலச்சரிவை அதிதீவிர பாதிப்பாக அங்கீகரித்து கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிப்பதோடு, ரூ. 2,000 கோடி சிறப்பு நிதி தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு […]

Loading

செய்திகள்

வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவி ஏற்றார் பிரியங்கா காந்தி

‘உங்களின் குரலாக ஒலிப்பேன்’ என உரை புதுடெல்லி, நவ. 28– அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி, வயநாடு எம்.பி.யாக இன்று பிரியங்கா பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அவரது கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். பாராளுமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலியை தேர்வு செய்ததன் மூலம், வயநாடு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. முதன்முறையாக, பிரியங்கா போட்டியிட்டு 6,22,338 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவர், […]

Loading

செய்திகள்

வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல் : பிரியங்கா காந்தி முன்னிலை

வயநாடு, நவ. 23– வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியை நோக்கி அவர் முன்னேறி வருகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி. பதவி வகிக்க முடியாது என்பதால், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். ரேபரேலி […]

Loading

செய்திகள்

வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி, அக். 16– வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. “ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி மற்றும் நவம்பர் 20ஆம் தேதி என […]

Loading

செய்திகள்

வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு: ஆய்வு நிறுவனம் தகவல்

திருவனந்தபுரம், செப். 3– வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகில் உள்ள மூன்று மலை கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 400க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பதும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர் என்பதை அறிவோம். நிலச்சரிவுக்கு வாய்ப்பு இந்த நிலையில் வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு […]

Loading

செய்திகள்

வயநாடு நிலச்சரிவு நிவாரணம்: ஆந்திரா சார்பில் ரூ.10 கோடி நிதி

திருவனந்தபுரம், ஆக. 17– கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நிவாரண நிதிக்கு, ஆந்திரா சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை மேப்பாடி, அட்டைமலை ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. நூற்றுக்கணக்கானோர் மண்ணில் உயிருடன் புதைந்தனர். […]

Loading

செய்திகள்

வயநாடு நிலச்சரிவு : ‘இயற்கை பேரிடரை தேசிய பேரழிவாக அறிவிக்க விதிகளில் இடமில்லை’

மத்திய அரசு தகவல் இயற்கை பேரிடரை தேசிய பேரழிவாக அறிவிக்க விதிகளில் இடமில்லை என காங்கிரஸ் தலைமையிலான அரசு 2013ல் அளித்த பதிலை, வயநாடு நிலச்சரிவு தொடர்பான கோரிக்கைக்கு மத்திய அரசு சுட்டிக்காட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இயற்கை பேரிடரை தேசிய பேரழிவாக அறிவிக்கும் விவகாரத்தில் கடந்த […]

Loading

செய்திகள்

மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.5 கோடி நிதி: கேரள முதலமைச்சரிடம் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

சென்னை, ஆக. 1– நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5 கோடிக்கான காசோலையை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தம்முடைய ஆழ்ந்த வருந்தங்களையும் இரங்கலையும் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டிலிருந்து […]

Loading

செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 284 பேர் மரணம்: ஒரே நாளில் 98 சடலங்கள் மீட்பு

வயநாடு, ஆக. 1கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி சூரல்மலை ஆகிய மலைப்பகுதிகளில் கடந்த திங்களன்று நள்ளிரவில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்று ஒரே நாளில் 98 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.மீட்கப்படும் சடலங்கள் சூரல்மலை பள்ளிகளில் ப்ரீசரில் வரிசையாக வைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது. அடையாளம் காணமுடியாத அளவுக்கு சடலங்கள் சிதைந்து காணப்படுகின்றன. மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். […]

Loading