டாக்கா, ஆக. 7– வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டம் வன்முறை கலவரமாக மாறியதில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதைத் தொடர்ந்து, இடைக்கால ஆட்சியமைக்க ராணுவம் அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை முன்வைத்த நிலையில், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். தற்போது வங்கதேசத்தில் அமைதி திரும்புவதாக செய்திகள் வெளிவருகின்றன. முஹம்மது யூனுஸ் இடைக்கால அரசுக்கு […]