திண்டிவனம், நவ. 6 பா.ம.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய வலியுறுத்தி திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் புவனகிரி மஞ்ச கொல்லை கிராமத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் குடி போதையில் அந்த வாலிபரை கடுமையாக அடித்தும், காலால் முகத்தில் உதைத்தும் அராஜகம் செய்தாக கூறப்படுகிறது.அந்த வாலிபர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். […]