சென்னை, மார்ச் 5– பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மீது பற்று இருப்பதாக பாஜக கூறுவது உண்மையெனில், ரெயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மும்மொழிக் கொள்கையால் தாய்மொழிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் […]