கொல்கத்தா, ஜன. 30– மேற்கு வங்கத்தில் பேராசிரியை ஒருவர், வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்த வீடியோ வெளியான நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையும், மாணவனும் புதுமண தம்பதி போல், ஒருவருக்கொருவர் பொட்டு வைத்துக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்கத்தின் ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில், வகுப்பறைக்குள்ளேயே முதலாமாண்டு மாணவனை, பேராசிரியர் ஒருவர் பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்த வீடியோ வெளியானது. […]