மும்பை, பிப். 7– மகாராஷ்டிர அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான தனஞ்சய் முண்டே, தனது மனைவி மற்றும் மகளுக்கு ரூ.2 லட்சம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி வைத்துள்ளன. இந்த நிலையில், அவ்வரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனஞ்சய் முண்டே உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ளார். நீதிமன்றம் […]