சென்னை, ஏப்.23- அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ரூ.2 ஆயிரம் தொகுப்பூதியம் உயர்வு செய்யப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். சட்டசபையில், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் செந்தில்பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: * போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களை கண்டறிந்து விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வுத் துறையின் பயன்பாட்டுக்காக 50 கையடக்க வாய்வழி திரவ மருந்து சோதனை சாதனங்கள் வாங்கப்படும். * போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத […]