செய்திகள்

வங்கி காசோலைகளில் கருப்பு மையில் எழுதலாமா?: ரிசர்வ் வங்கி விளக்கம்

சென்னை, ஜன. 26– வங்கி காசோலைகளில் கருப்பு மையில் எழுதலாமா என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு பரவிய நிலையில், ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கருப்பு மையில் வங்கி காசோலைகளை (Bank Cheques) எழுதுவதைத் தடை செய்துள்ளதாகக் கூறும் ஒரு பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த தகவல் உண்மைதானா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது காசோலைகளில் கருப்பு மையைப் பயன்படுத்துவதை இந்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளதாக […]

Loading

செய்திகள்

3 வகை வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடெல்லி, ஜன. 1– நாடு முழுவதும் 3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் வங்கிக்கணக்குகள் இல்லாத குடிமக்கள் வெகு குறைவு. அதே நேரத்தில் அந்த கணக்குகளை நுகர்வோர் சரியாக பயன்படுத்துவது இல்லை என்ற புகார்கள் இருக்கின்றன. பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் […]

Loading

செய்திகள்

தனியார் வங்கிகளில் பணி விலகல் 25 சதவீதம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

புதுடெல்லி, டிச. 30– தனியார் வங்கிகளில் பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வங்கி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தனியார் துறை வங்கிகள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, பணி விலகுவது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சிறிய விவசாயிகளுக்கு நற்செய்தி

தலையங்கம் ரிசர்வ் வங்கி (RBI) விவசாயிகளின் நிதிச் சுமைகளைக் குறைப்பதற்கும், விவசாய செலவுகள் அதிகரித்து வருவதை ஈடு செய்யவும் ரூ.2 லட்சம் வரை அடமானம், Collateral, ஏதும் இல்லாத விவசாய கடனுக்கான வரம்பை உயர்த்தியுள்ளது. முன்பு ரூ.1.60 லட்சம் வரை மட்டுமே என இருந்ததை அதிகரித்து உள்ள இந்த புதிய மாற்றம் அடுத்த (2025) ஆண்டு ஜனவரி 1–ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றம் ஏன் அவசியம்? பொதுவாக சிறிய மற்றும் வழக்கமான விவசாயிகள், […]

Loading

செய்திகள்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி, டிச. 13– இந்திய ரிசர்வ் வங்கிக்கு இன்று ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சோதனை செய்யப்பட்டது. மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்தாண்டில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு வந்த மிரட்டல் செய்தி, ரஷ்ய மொழியில் இருந்தது குறிப்பிடதக்கது. இதனையடுத்து மாதா ரமாபாய் மார்க் (எம்ஆர்ஏ மார்க்) காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு சோதனை இந்த […]

Loading

செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 6.5 சதவீதமாகவே தொடர்கிறது

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு மும்பை, டிச. 6– ‘வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகித்தில் மாற்றமில்லை. 6.5 சதவீதம் ஆகவே தொடரும்’ என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ரெப்போ வட்டி விகிதத்தில், 11வது முறையாக […]

Loading

செய்திகள்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, நவ. 26– நெஞ்சுவலி காரணமாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ்; 67 வயதாகும் இவர், ஒடிசாவைச் சேர்ந்தவர். ஆனால், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி. தமிழக அரசில் பல துறைகளில் பணியாற்றி உள்ளார். அடுத்த மாதம் சக்திகாந்த தாசின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி […]

Loading

செய்திகள்

குழந்தைகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கினார்

சென்னை, செப்.19-– ‘குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கினார். நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-–25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்யும்போது; “குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க ‘புதிய ஓய்வூதிய திட்டம்’ தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது அந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்தபடி, என்.பி.எஸ். வாத்சல்யா ஓய்வூதிய திட்டத்தை காணொலி காட்சி […]

Loading