ஜார்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன் வருத்தம் கோவை, ஜூன் 12– கோவை மக்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக முடிவெடுக்கிறார்கள் என்று ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:– “ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்தியா மகத்தான நாடாக முன்னேற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடிக்கு மூன்றாவது முறையாக வாக்களித்து […]