சிறுகதை

ஆம்லேட்- ராஜா செல்லமுத்து

சரியாக 9 மணிக்கு தன் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று அருள் கருப்புவிடமும் செல்வத்திடம் சொல்லியிருந்தார். அதிகாலையே எழுந்த செல்வம் குளித்து முடித்து கருப்புக்கு போன் செய்தான். கருப்பு நீங்க எத்தனை மணிக்கு கிளம்புவே என்று கேட்டான். நான் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விடுவேன் என்று கருப்பு பதில் சொன்னார். ஓகே எங்க என்ன பிக்கப் பண்ணிக்கிருவ? என்று செல்வம் கேட்டான். வழக்கம்போல நிற்கிற பிள்ளையார் கோவில்ல நில்லு என்று கருப்பு சொன்னார். 9 மணி அப்பாயிண்ட்மெண்ட் […]

சிறுகதை

பக்கத்து மாடி- ராஜா செல்லமுத்து

புதிதாக குடிவந்த வீட்டில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான் விஷ்ணு . முதலில் அது உடற்பயிற்சி இல்லை ; என்றாலும் பக்கத்து மாடியில் இருக்கும் பெண்ணைப் பார்ப்பதற்கு அவன் மாடியில் ஏறினான். விடிகிறதோ? இல்லையோ? பனி பூத்துக் கிடக்கும் அந்தக் குளிர்காலம் ; அதல் காலையில் எழுந்து அவன் உடற்பயிற்சி செய்யத் தவறுவதில்லை. அவன் உடற்பயிற்சியை விட பக்கத்து மாடிவீட்டுப் பெண்ணைப் பார்ப்பதிலேயே அவன் கவனம் நிறைந்தது. அதோடு உடற்பயிற்சியும் செய்து கொண்டிருந்தான். விடிகிறதோ ? இல்லையோ? தினமும் […]

சிறுகதை

மகனாற்றுப்படை – ராஜா செல்லமுத்து

ஜோயல் இருசக்கர வாகனத்தில் எப்போது சென்றாலும் வாகனத்தின் 6 வயது மகனை முன்னால் அமர வைத்து தான் செல்வார். பின்னால் இருக்கும் இருக்கைக்கு அவர் செல்லும் பாதையில் பெரியவர்கள் யாரேனும் தெருவில் சென்றால் அவர்களை அழைத்து உட்கார வைத்து அவர்கள் இங்கு செல்கிறார்களோ ? அங்கு இறக்கி விட்டு செல்லும் குணம் படைத்தவராக இருந்தார். இது மகன் விஷாலுக்கு புரியாமல் இருந்தது. எப்போது சென்றாலும் வயதானவர்களைப் பின் இருக்கையில் அமரவைத்து அழைத்துச் செல்லும் தந்தையின் செயல் போகப்போக […]

சிறுகதை

ஜனநாயகக் கடமை – ராஜா செல்லமுத்து

அன்று வாக்குப்பதிவு, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஏற்கனவே வாக்களித்தவர்கள் புதிதாக வாக்களிப்பார்கள் என்று ஊரே கூடி நின்று கொண்டிருந்தது. பார்வதியம்மாள் படுக்கையில் கிடந்தார். இன்றோ நாளையோ இறந்து விடலாம் என்ற அளவில்தான் அவரின் நிலை இருந்தது..அவரை புறக்கணித்து விட்டு ,அத்தனை பேரும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்று கொண்டிருந்தார்கள். பவுனு பவுனு தன் பெயரன் பெயரை சொல்லிக் கொண்டே இருந்தார் பார்வதியம்மாள். என்ன கெழவி சும்மா படுக்க மாட்டியா? அவனவன என்ன பாடு பட்டுட்டு இருக்கிறான். நீ எப்ப […]

சிறுகதை

கால் ரெக்கார்டர்- ராஜா செல்லமுத்து

செல்போனில் பேசும் அத்தனை பேர் பேச்சுக்களையும் கால் ரெக்கார்டர் செய்தாள் குமாரி. யார் பேசினாலும் அதை அப்படியே பதிவு செய்து மற்றவர்களிடம் போட்டு காட்டுவது தான் அவள் வேலை. ஒரு நாள் அவளின் உறவினர் சுபாவைக் கூப்பிட்டு ‘‘நீங்க அனிதா பற்றி எப்படி நினைக்கிறீங்க? ’’என்று கேட்டாள் குமாரி. ஏன் அப்படி கேட்கிற என்று சுபா மறு கேள்வி கேட்டாள். இல்ல அவங்களை பற்றி என்ன மதிப்பீடு வச்சிருக்கீங்க என்று மறுபடியும் கேட்டாள் குமாரி. அவங்க ரொம்ப […]

சிறுகதை

தற்பெருமை – ராஜா செல்லமுத்து

அலுவலகத்தில் வேலை செய்யும் லாரன்ஸைப் பார்த்தால் அங்கு வேலை செய்பவர்களுக்கு ஒருவிதமான அதிர்ச்சி ஏற்படும். லாரன்ஸ் தன்னைப்பற்றி பேசுவதிலேயே குறியாக இருப்பார். அவர் எதற்கும் இனிமையானவர் தான்; ஆனால் அவர் செய்கை சரியில்லை என்பது அந்த அலு வலகத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும்; அதனால்தான் லாரன்சை பார்த்ததும் அப்படி ஓடுவார்கள். லாரன்ஸ் கெட்டவனும் இல்லை; மற்றவர்களுக்குத் தீங்கு இழைப்பனும் கிடையாது. ஆனால் தன்னைப் பற்றியே பேசிக் கொள்வதில் வல்லவர் என்பதால் அது பிறருக்கு பிடிக்காமல் போய் இருப்பது நியாயம்தான். […]

சிறுகதை

கொலைக் கைதி – ராஜா செல்லமுத்து

எங்கு பார்த்தாலும் ஊரடங்கு. எங்கு பார்த்தாலும் அமைதி. மக்கள் நடமாட்டம், அதிக மற்ற வீதிகள். இப்படி நோய் காலம் குறைந்ததற்கு முன்னால்நடந்த நிகழ்வை நம் கண்முன் நிறுத்தினார் குமரன். நடந்த நிகழ்வைக் கேட்கும்போது நமக்கே உயிரில் பாதி உறைந்தது. குமரன் அந்த நிகழ்வை சொல்ல ஆரம்பித்தார்.இப்போது சகஜ நிலைக்கு நாடு திரும்பி இருந்தாலும் இருந்தாலும் அப்போது நடந்த நிகழ்வு நம்மை ஒரு மாதிரியாக செய்தது.அப்படி ஒரு நிகழ்வு தான் குமரன் வாழ்வில் நடந்தது. அதை விரிவாக கூற […]

சிறுகதை

மடிப்பிச்சை … ராஜா செல்லமுத்து

பிரதான கோயிலின் வாசலில் பக்தர்கள் கூடி நின்றார்கள். எப்போதும் போல பிச்சைக்காரர்கள் பக்தர்கள் கோயிலுக்குள் விடாமல் அடைத்து நின்று கொண்டு, ‘‘அம்மா பிச்சை போடுங்க….. ஐயா பிச்சை போடுங்க ; ஐயா தர்மம் பண்ணுங்க…. ஐயா’’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இது பக்தர்களுக்கு ஒருபக்கம் எரிச்சலாக இருந்தாலும் அவர்களை திட்ட முடியாத நிலைமையில் இருந்தார்கள். பிச்சைக்காரர்கள் பக்தர்களிடம் கையேந்துவது, கௌரவ குறைச்சலாக நினைக்கவில்லை; அவர்கள் கையேந்திக் கொண்டு இருந்தார்கள் இந்தப் பிச்சைக்காரர்களுக்கு நடுவில் ஒரு பெண் […]

சிறுகதை

பிரதர்ஸ் -.. ராஜா செல்லமுத்து

விக்கி, சிவன் இரண்டு பேரும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள்; விக்கி மூத்தவன்; சிவன் இளையவன். விக்கி விளையாட்டில் கெட்டிக்காரன்.சிவன் படிப்பில் கட்டிக்காரன். விக்கி விட சிவனை வீட்டிலுள்ளவர்கள் ரொம்ப பாசமாக பார்ப்பார்கள். சிவன் சின்னவன் என்பதால், அவனுக்கு அதிகச் செல்லம். கூடவே நன்றாகப் படிப்பவனும் கூட என்று வீட்டில் அதிகப்படியான அன்பு . இது விக்கிக்கு அறவே பிடிக்கவில்லை. இது நாளுக்கு நாள் அதிகமாக அண்ணன், தம்பி உறவுக்குள் விரிசல் ஏற்படத் தொடங்கியது அது என்ன? […]