செய்திகள்

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி

ஜெய்பூர், ஏப். 29– ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனிடையே அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அசோக் கெலாட், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், […]

செய்திகள்

டெல்லி – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

மும்பை, ஏப். 15– ஐ.பி.எல். டி20 போட்டியில் இன்று மும்பையில் நடைபெறும் 7வது ஆட்டத்தில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடந்த ராஜஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்வதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் டெல்லி அணி முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியிருப்பதால், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் என […]

செய்திகள்

ராஜஸ்தானிலும் இரவு நேர ஊரடங்கு அமல்

ஜெய்ப்பூர், ஏப். 15– ராஜஸ்தான் மாநிலத்தில் நாளைமுதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் நாளை முதல் மாலை 6 மணி தொடங்கி காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு நேர […]

செய்திகள்

ஜோத்பூர் ஐஐடி மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா

ஜோத்பூர், ஏப். 5– ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஐஐடியில் மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. தடுப்பூசி போடும் பணியும் விரைவு படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஐஐடியில் பயிலும் மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 60 […]

செய்திகள்

40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் முற்றுகை; இந்தியா கேட் அருகே விவசாயம்

டெல்லி, பிப். 24– புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி, உத்தரப் பிரதேச எல்லைகளில் 3 மாதங்களாக போராடும் விவசாயிகள், சாலை மறியல், ரயில் மறியல் என அடுத்தடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த நிலையில், […]

செய்திகள்

ஊழல் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

புதுடெல்லி, பிப். 6 ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஜஸ்தான் ஊழல் தடுப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி மணீஷ் அகர்வாலை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. காவல்துறை அவரது காவலை 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்திருப்பதை காரணம் காட்டி மாநில பணியாளர்கள் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் உத்தரவைப் பிறப்பித்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி மணீஷ் அகர்வால் 2010 ஆண்டு பணியில் இணைந்தவர். தற்போது ஜெய்ப்பூரில் உள்ள மாநில பேரிடர் மீட்பு படையில் இருந்த […]