செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் முழு ஊரடங்கு: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி, மே 4– கொரோனாவை கட்டுப்படுத்த, ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதிப்படுத்திவிட்டு, முழு ஊரடங்கை அமல்படுத்துவது ஒன்றே தீர்வு என்று, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த கொரோனா பாதிப்பு 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் […]

செய்திகள்

ஹோலிப் பண்டிகை புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் வழங்கட்டும் – பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, மார்ச் 29– ஹோலிப் பண்டிகை நாட்டு மக்களுக்கு புத்துணர்ச்சியையும், புதிய உத்வேகத்தையும் வழங்கட்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பிற பகுதிகளில் வழக்கம்போல் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மகாராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வழக்கமான உற்சாகமின்றி மக்கள் வீடுகளிலேயே ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் […]

செய்திகள்

நாகர்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல்

நாகர்கோவில், மார்ச் 1– நாகர்கோவில் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி நுங்கை விரும்பி சாப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி தமிழகத்தில் 3வது கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த அவர், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரத்திற்காக செல்லும் வழியில் நாகர்கோவில் அச்சன்குளம் கிராமத்தில் ராகுல் காரைவிட்டு கீழே இறங்கினார். அங்கு தெரு வீதியில் விற்பனை செய்யப்பட்ட நுங்கை […]

செய்திகள்

இறுதிச் சடங்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் சர்மாவின் உடலை தாங்கிச் சென்றார் ராகுல் காந்தி

புதுடெல்லி, பிப். 19– காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் சர்மாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ராகுல் காந்தி அவரது உடலைத் தாங்கிச் சென்றார். இடுகாட்டிற்கு அவரது உடலை எடுத்துச் செல்லும்போது நான்கு பேரில் அவரும் ஒருவராக வந்து உடலைத் தூக்கிச் சென்றார். ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் சர்மா, கோவாவில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு […]

செய்திகள்

சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிப்பதா? ராகுல்காந்தி கடும் கண்டனம்

டெல்லி, பிப். 15– சமையல் சிலிண்டர் விலையை ரூ. 50 ஏற்றியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அரசானது சிலிண்டர் விலையை உயர்த்தி பொதுமக்களிடம் கொள்ளையடிக்கிறது. இதனால் ’இருவர்’ மட்டுமே பயன்பெறுகிறார்கள் எனவும் சாடியுள்ளார். முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோரின் வளர்ச்சிக்காகவும் நலனுக்காகவுமே பாரதீய ஜனதா அரசின் அனைத்து திட்டங்களும் இருக்கின்றன என்று, ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். வேளாண் மசோதா […]