புதுடெல்லி, செப்.30- உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்காக அதிகமான பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என ராகுல் காந்தி அழைப்பு விடுத்து உள்ளார். அரசியல் மற்றும் முடிவு எடுப்பதில் பெண்களுக்கும் சம பங்களிப்பு வழங்கும் வகையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘சக்தி அபியான்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டு உள்ளது. இதைப்போல அரசியல் அரங்கில் பெண்களின் குரலை வலுப்படுத்தவும், சமூகத்தில் தேவையான […]