செய்திகள்

இன்று இந்தியா வருகிறது ஸ்புட்னிக்

டெல்லி, மே 1– கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரித்த கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக்–வி ரஷ்யாவின் ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம், தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள […]

செய்திகள்

பெரும் கோடீஸ்வரர்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 3 வது இடம்

நியூயார்க், ஏப். 8– உலகின் முதல் பத்து கோடீஸ்வரர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும், உலகின் கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர் எனவும், இவருக்கு அடுத்த இடத்தில் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உள்ளதாகவும், […]

செய்திகள்

கொரோனா: பிரேசிலில் ஒரே நாளில் 3,668 பேர் பலி

பிரேசில், மார்ச் 31– பிரேசிலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 3,668 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,87,95,232 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.39 கோடியை தாண்டி உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 28,15,854 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில் பிரேசிலில் […]

நாடும் நடப்பும்

கொரோனா தடுப்பூசி: உலக தலைவர்கள் இந்தியாவை பாராட்டுகிறார்கள்

இந்த மாத துவக்கத்தில் இந்திய அரசு கனடா நாட்டிற்கு 50 ஆயிரம் பேருக்கு கோவிட் தடுப்பூசியை அனுப்பி உள்ளது. கடந்த 2020–ம் ஆண்டில் நாம் கொரோனா பாதிப்பால் செயலிழந்து இருந்தோம், சீனா மீது குற்றம் சுமத்தினோம்! ஆனால் கிருமி ஆய்வகங்கள் உலகெங்கும் இந்த புதிய ரக விஷம கிருமியை எதிர்த்து போரிடுவது எப்படி என்ற ஆய்வில் மும்முரமாக இருந்தனர். அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருந்தது. நாம் புதிய ரக தடுப்பூசியை உருவாக்க தயாரான போது உடன் அவற்றை […]

நாடும் நடப்பும்

இந்தியா – ஜப்பான் கூட்டில் இலங்கையில் சரக்கு துறைமுகம்

2021–ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தபோது இந்தியாவின் முன் நின்ற மிகப்பெரிய சவால்களில் பிரதானமானது நமது வட எல்லைப் பகுதியில் இருந்த சீனா, பாகிஸ்தான் ஊடுருவல்களும் யுத்த பதட்ட நிலையும் ஆகும். சீனா தங்களது ஆதிக்கத்தை வலியுறுத்தும் விதமாக ‘பெல்ட் மற்றும் சாலை’ திட்ட முயற்சிகளை (Belt and Road Initiative) நடைமுறைப்படுத்தி வருவதுடன் தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த எடுத்து வந்த பல்வேறு திட்டங்களால் நமது கடல்சார் பாதுகாப்பு அம்சங்கள் மிக மெல்லியதாக இருந்ததை […]