செய்திகள்

யூடியூபர் வாசன் செல்போனை ஒப்படைக்க போலீஸ் நோட்டீஸ்

மதுரை, மே 31– யூடியூபர் வாசன் செல்போனை ஒப்படைக்க போலீசார் நோட்டீஸ் வழங்கினர். சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் […]

Loading

செய்திகள்

சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான விசாரணை 27–ந் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை, மே 23– சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான விசாரணை 27–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கர் தேனியில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா இருந்ததாக அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காரில் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்ட […]

Loading

செய்திகள்

யூடியூபர் டிடிஎப் வாசன் கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நோட்டீஸ்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்கள் விற்பனை சென்னை, மே 22– அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்கள் விற்பனை செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பப்பட்டதன் எதிரொலியாக யூடியூபர் டிடிஎப் வாசன் கடைக்கு போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடிஎப் வாசன் கடந்த வருடம் சென்னை- – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு கையில் எலும்பு […]

Loading

செய்திகள்

சவுக்கு சங்கரைத் தொடர்ந்து யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை

சென்னை, மே 14– சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். […]

Loading

செய்திகள்

10 மணி நேர சோதனை நிறைவு : சவுக்கு சங்கர் வீட்டில் கஞ்சா பறிமுதல்: வீடு, அலுவலகத்திற்கு சீல்

சென்னை, மே.11- சென்னையில் சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் 10 மணி நேரம் நடந்த சோதனை நிறைவுபெற்றது. அவரது வீட்டில் கஞ்சா சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வீட மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பிரபல ‘யூடியூபர்’ சவுக்கு சங்கர், தனியார் ‘யூடியூபர்’ சேனலுக்கு அளித்த பேட்டியில், உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவை பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை […]

Loading