சென்னை, பிப்.22- தனது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது அதிகார துஷ்பிரயோகம் என்றும், இந்த நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்வேன் என்றும் இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் கதை விவகாரத்தில், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமலாக்கத்தறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் […]