செய்திகள்

2 நாள் அரசுமுறை பயணமாக மொரீசியஸ் சென்றடைந்த மோடி

மொரிசீயஸ், மார்ச் 11– பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக மொரீசியஸ் சென்றடைந்துள்ளார். மொரீஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க 2 நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று மொரீஷியஸ் புறப்பட்டார். இது தொடர்பாக மோடி வெளிட்ட அறிக்கையில், “எனது நண்பர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களின் அழைப்பை ஏற்று, மொரீஷியஸின் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நான் மொரீஷியஸுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறேன். மொரீஷியஸ் […]

Loading

செய்திகள்

மகா சிவராத்திரி: மோடி, ராகுல் வாழ்த்து

புதுடெல்லி, பிப். 26– இன்று மகா சிவராத்திரி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்றிரவு கொண்டாடப்படவுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:– மகா சிவராத்திரி திருநாளில் நாட்டு மக்கள் […]

Loading

செய்திகள்

வெள்ளை மாளிகையில் டிரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு; பிரதமர் மோடி மகிழ்ச்சி

அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பினார் புதுடெல்லி, பிப். 14– ‘வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்’ என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். பிரான்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டு நாள் அரசு முறை பயணமாக 12ம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், உலக பெரும் […]

Loading

செய்திகள்

தேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, ஜன. 24– தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் குழந்தைகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று, தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தைக்கு தொடர்ந்து அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் எங்கள் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தையின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. பெண் குழந்தைகளை மேம்படுத்தும் […]

Loading

செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலம் மகா கும்பமேளா துவங்கியது

திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர் எண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கும்: மோடி வாழ்த்து பிராயாக்ராஜ், ஜன. 13– உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பிரயாக்ராஜ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரமாண்ட திருவிழா. இந்துக்கள் கொண்டாடும் பல்வேறு விழாக்களில் மகா கும்பமேளா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டு தினம்: மோடி அஞ்சலி

புதுடெல்லி, டிச. 13 நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டை முன்னிட்டு, தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலில் உயிர்தியாகம் செய்தவர்களின் புகைப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த படங்களுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் […]

Loading

செய்திகள்

நிஜ்ஜார் கொலை: மோடியை தொடர்புபடுத்தும் செய்தியை மறுத்த கனடா அரசு

ஒட்டவா, நவ. 22– சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய பிரதமர் மோடியை தொடர்புபடுத்தும் வகையில் வெளியான ஊடக செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது. கனடாவை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலுக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. கனடா ஊடக செய்தியை மறுத்து அந்நாட்டு பிரதமரின் தேசிய பாதுகாப்பு […]

Loading

செய்திகள்

‘உலகின் நம்பிக்கை ஒளி இந்தியா’; மோடி பெருமிதம்

‘ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவைப் புகுத்தி வருகிறோம்’ புதுடெல்லி, அக்.21– ‘பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், நம்பிக்கை ஒளியாக இந்தியா உள்ளது,’ என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். புதுடெல்லியில் நடந்த ‘டிவி’ நிகழ்ச்சியில், மோடி பேசியதாவது:– இந்தியா அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில், சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு கவலைகளில், மூழ்கியுள்ள உலகிற்கு இந்தியா நம்பிக்கை அளிக்கிறது. நாங்கள் 3வது முறையாக, ஆட்சி அமைத்து, […]

Loading

செய்திகள்

விமானப்படை நாள்: மோடி, ராகுல் வாழ்த்து

புதுடெல்லி, அக். 8– இன்று இந்திய விமானப்படை நாளையொட்டி பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகளவில் திறன் வாய்ந்த விமானப்படை அமையப்பெற்ற நாடுகளில் நம் பாரத தேசமும் ஒன்றாக திகழ்கிறது. விமானப்படை வீரர்களைப் போற்றி கவுரவிக்கும் விதமாக அக்டோபர் 8-–ந்தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, […]

Loading

செய்திகள்

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து திருடப்பட்ட சிலைகளை திரும்ப வழங்கிய அமெரிக்கா

அதிபர் பிடனும், மோடியும் சிலைகளை பார்வையிட்டனர் வாஷிங்டன், செப். 22– இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 300 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நாடான இந்தியாவில் பல்வேறு தொன்மையான இடங்களும், சிலைகளும் உள்ளன. இந்த சிலைகளின் மதிப்பு, சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் இருக்கும். இதனையடுத்து அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் திருடிச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கடத்தி வரப்பட்ட […]

Loading