செய்திகள்

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 2 கோடி மோசடி செய்த ஆசாமி கைது

சென்னை, பிப். 1– வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மத்திய அரசின் அனுமதி பெறாமல் சுமார் 100 க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூபாய் 2 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த பத்மநாபன் என்பவரிடம் கடந்த 2023ம் வருடம் சாய்புதின் (51) என்பவர் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், சம்பளம் ரூ. 1 லட்சம் என ஆசை வார்த்தைகள் கூறி […]

Loading

செய்திகள்

வெளிநாட்டு பொருட்கள் வாங்கி தருவதாக ரூ. 38 லட்சம் மோசடி: 3 பேர் கைது

சென்னை, ஜன. 5– கொடுங்கையூர் பகுதியில் வெளிநாட்டு உபகரணங்கள் வாங்கி விற்கும் தொழிலில் பங்கு தருவதாக கூறி ரூ. 38 லட்சம் பெற்று மோசடி செய்த கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, கொடுங்கையூர், சின்னாண்டிமடம் பகுதியைச் சேர்ந்த செந்தில் (42), பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடன் முகைதீன் அப்துல்காதர் என்பவர் சில காலங்களாக பழகி, வெளிநாட்டு உபகரணங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் […]

Loading

செய்திகள்

சைபர் கிரைமில் இருந்து அழைப்பதாகக் கூறி கல்லூரி பேராசிரியையிடம் ரூ.38 லட்சம் மோசடி

ஆவடி, டிச.26-– மும்பை சைபர் கிரைமில் இருந்து அழைப்பதாகக் கூறி ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியையிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் வசிப்பவர் ஜெனட் டெய்சி (வயது 62). ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை. கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி இவரது செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், “நாங்கள் மும்பை சைபர் கிரைம் போலீஸ், உங்கள் பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டு அதன் மூலம் சமூக விரோத செயல்கள் […]

Loading

செய்திகள்

பழைய நாணயத்தை தந்தால் அதிக பணம் தருவதாக மோசடி: சேலத்தில் 5 பேர் கைது

சேலம், செப். 18– பழைய நாணயத்தைத் தந்தால் அதிக பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 5 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மண் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு, முகநூலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில், பழங்கால நாணயங்களை வைத்திருப்போர் தொடர்பு கொண்டால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பழனிசாமி அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணைத் […]

Loading

செய்திகள்

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி: தேவநாதனின் 5 கணக்குகள் முடக்கம்

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை சென்னை, ஆக. 20– மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.525 கோடியை மோசடி செய்த விவகாரத்தில், தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கடந்த 2017 ஆம் ஆண்டு […]

Loading

செய்திகள்

ரூ.20 லட்சம் வாடகை தராமல் மோசடி செய்ததாக யுவன்சங்கர் ராஜா மீது புகார்

சென்னை, ஆக. 18– இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது, ரூ. 20 லட்சம் வாடகை தராமல் மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிரபல இசையமைப்பாளரும் இளையராஜாவின் இளைய மகனுமான யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடைகைக்கு குடியிருந்து வந்தார். 2018 முதல் அங்கு வசித்து வந்த யுவன், கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 20 லட்சம் வாடகை பாக்கி தரவில்லை என உரியமையாளர் புகார் […]

Loading

செய்திகள்

மயிலப்பூர் நிதி நிறுவன மோசடி: கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு சொந்தமான 12 இடங்களில் சோதனை

தொலைக்காட்சி, நிதி நிறுவனத்துக்கு சீல் வைத்து குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை சென்னை, ஆக. 18– மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி ரூபாய் மோசடி செய்ததால் கைது செய்யப்பட்ட சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதனுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய 11 இடங்களில் குற்றப்பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தி வருதுடன் மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கும் அவருக்கு சொந்தமான தொலைகாட்சி நிறுவனத்திற்கும் போலீசார் சீல் வைத்தனர். சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி […]

Loading

செய்திகள்

மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து; பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் தகவல் சென்னை, ஆக. 1– மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார். அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் அங்கீகாரம் மற்றும் இணைப்பு சான்றிதழை புதுப்பிக்க வேண்டும். இதற்கு உள்கட்டமைப்பு பேராசிரியர்கள், பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை அகில […]

Loading

செய்திகள்

மதுரையிலிருந்து அயோத்திக்கு செல்ல போலி விமான டிக்கெட்: 106 பேரிடம் மோசடி

மதுரை, ஜூலை 12– மதுரையில் இருந்து அயோத்தி அழைத்து செல்வதாக கூறி 106 பேரிடம் போலி விமான டிக்கெட் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்தாண்டு திறக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய சென்னை, சேலம், மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையும் இருக்கின்றது. ஆனால், […]

Loading

செய்திகள்

கிருஷ்ணகிரி ஆசிரியரிடம் ஆன் லைன் மூலம் ரூ.20.85 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, ஜூன் 28– கிருஷ்ணகிரி ஆசிரியரிடம் ஆன் லைன் மூலம் ரூ.20.85 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 34). அரசுப்பள்ளி ஆசிரியர். இவரது வாட்ஸ்அப்பிற்கு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் சில கம்பெனிகளின் பங்கு முதலீட்டு விவரங்கள் கொடுக்கப்பட்டு, அதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என இருந்தது. அதில் ஒரு இணையதள […]

Loading