செய்திகள்

கொல்கத்தா மருத்துவமனையைச் சுற்றி 30–ந்தேதி வரை தடை உத்தரவு நீட்டிப்பு

கொல்கத்தா, செப். 14– கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சுற்றியுள்ள தடை உத்தரவுகள் 30–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவ ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முன்னதாக, மருத்துவமனையின் பாதுகாப்புப் பொறுப்பைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையைச் சுற்றிலும் மக்கள் கூடுவதற்குத் தடை […]

Loading

செய்திகள்

உடலில் 14 இடங்களில் காயம்; கொல்கத்தா பெண் டாக்டரின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

கொல்கத்தா, ஆக. 19– மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், பயிற்சி டாக்டர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு கேட்டும், அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் […]

Loading

செய்திகள்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்

கொல்கத்தா, ஆக. 8– மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புத்ததேவ் பட்டாச்சார்யா 2000 முதல் 2011-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான பட்டாச்சார்யா முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராக இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும், பிறகு அமைச்சராகவும் பணியாற்றிய […]

Loading