செய்திகள்

கோவையில் ரூ.265 கோடியில் மேம்பாலம் நீட்டிப்பு பணி: எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

சென்னை, பிப்.4– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் மாநகரில், 265 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் நீட்டிப்பு பணிக்கு அடிக்கல் நாட்டினார். மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் […]