செய்திகள்

மெட்ரோ ரெயில் 2–ம் கட்டப் பணிகள்: அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை, அக் 26 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– கலைஞரின் ஆட்சி காலத்தில் 2007–ம் ஆண்டு தமிழ்நாடு அரசும் – ஒன்றிய அரசும் இணைந்து மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை துவக்கினோம். 22 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு […]

Loading

செய்திகள்

3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரெயில் இயக்கம்

சென்னை, அக். 15– கன மழையால் பயணியர் பாதிக்கப்படாமல் இருக்க இன்று முதல் 3 நாட்களுக்கு வழக்கமானதைவிட கூடுதல் ரெயில்கள் இயக்குவதாக, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கினால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், கூடுதல் மெட்ரோ ரெயில்களை இயக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

Loading

செய்திகள்

சென்னையில் ஓட்டுனர் இல்லா முதல் மெட்ரோ ரெயில் உற்பத்தி நிறைவு

சென்னை, செப். 22– சென்னையில் ஓட்டுனர் இல்லா முதல் மெட்ரோ ரெயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கியுள்ளது இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளர்களுக்கு பயிற்சி, […]

Loading

செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை

சென்னை, ஆக. 9–- இந்தியாவில் பிற மாநிலங்களில் நடைபெறும் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூ.35 ஆயிரத்து 125 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை. ‘பூஜ்ஜியம்’ நிதி ஒதுக்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2009-ம் ஆண்டு அப்போது துணை முதல மைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கு 99 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது

சென்னை, ஆகஸ்ட்6- சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் 2ம் கட்டப்பணிகளுக்கு 99 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் கூறினர். சென்னை மாநகரில் 2வது கட்டமாக மெட்ரோ ரெயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் 118 ரெயில் நிலையங்களுடன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த 3 வழித்தடங்களில் பணிகள் நடப்பதற்காக 289 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கண்டறியப்பட்டது. இதில் 277 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. […]

Loading

செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில்களில் ஜூன் மாதம் 84.3 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜூலை 2– சென்னை மெட்ரோ ரெயில்களில் ஜூன் மாதம் 84.3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் […]

Loading