சாரதா அரசாங்க பணியில் பொதுப் பணித்துறையில் சேர கடிதம் வர, தனது ஊருக்குப் பக்கத்திலேயே உள்ள அலுவலகத்தில் பணி நியமனம் வாங்கினார். அலுவலகத்தில் உள்ளவர்களுடன் சற்று இணக்கமாக சென்று வேலைகளைக் கற்றுக் கொண்டார். நிறைய மக்கள் வந்து செல்லும் அலுவலகம் ஆனதால் எப்போதும் அலுவலகம் கலகலப்பாக இருந்தது. தனது பணியில் நேர்மையுடன் பணி புரிந்தார் சாரதா. வேலைக்குச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் கடந்த வேளையில் சாரதா அப்பாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டு , என்ன […]