சென்னை, ஜூலை 27–- நெஞ்சு வலியால் துடித்த போதும் பள்ளி குழந்தைகளின் உயிரை காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த தனியார் பள்ளி டிரைவர் குடும்பத்துக்கு ரூ,5 லட்சம் நிதி உதவியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சத்யா நகரில் வசித்து வந்தவர் மலையப்பன் (வயது 49). இவர், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25–-ம் தேதி அன்று பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாணவர்களை வீட்டில் விடுவதற்காக வேனில் அழைத்து சென்று […]